நெல்லியடி சூ பலர்ஸ்ஸை பதம் பார்த்தது பெண்ணின் மோட்டார் சையிக்கிள்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பெண்ணின் மோட்டார் சையிக்கிள் நெல்லியடியில் உள்ள செருப்பு விற்கும் கடைக்குள் புகுந்துள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி சமிச்ஞை விளக்கு பகுதியின் ஊடாக பயணித்த 3 பிள்ளைகளின் தாயார் மோட்டார் சையிக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சூ பலர்ஸ் கடைக்குள் உட்புகுந்து கண்ணாடிகளை உடைத்து சேதமாக்கியது. இதில் எவருக்கும் காயமேற்படாமல் தப்பினர். நெல்லியடி சமிச்ஞை பகுதியில் மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருக்கையில் பலரும் வேகமாக வீதியைக் கடந்து செல்வதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.