நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளுக்கு அபராதம்
நெல்லியடி சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை 94 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதியில் இயங்கும் உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் கையுறை, தொப்பி, மற்றும் மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத இரு உணவகங்களுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதமும், காலாவதியான ஒன்றரை லீற்ரர் சோடாவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை மற்றும் குளிரூட்டியை அழுக்கான நிலையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆயிரம் ரூபா அபராதமும், சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திண்மக் கழிவு வைக்கப்பட்டமை மற்றும் தொற்று ஏற்படக் கூடிய வகையில் களஞ்சிய அறை நிலத்தை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆயிரம் ரூபா அபராதமும் பலசரக்கு கடையில் நிலம் அழுக்காகவும், அழுக்கான நிலையில் இருந்த நிலத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 ஆயிரம் ரூபா அபராதமும் என பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 74 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.