நெல்லியடி சன சமூக நிலையத்தின் பொங்கல் விழா
நெல்லியடி சன சமூக நிலையத்தின் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


ஓய்வு நிலை அதிபர் கி.கிருஸ்ணாகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக கணித பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் பாலசுப்பிரமணியம் யோகராஜா, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி யோகராஜா கிருபாஹரி ஆகியோரும் கெளரவ விருந்தினராக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி உதவி அதிபரும் நெல்லியடி தடங்கன் புளியடி முருக மூர்த்தி ஆலய தலைவருமான வீரகத்தி சுதர்சன், நெல்லியடி கிராம அலுவலர் சோமசுந்தரம் ரமேஷ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.