Thu. May 21st, 2026

நெல்லியடி சந்தை நிர்வாகம் நேரடியாக பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ்

01.01.20.20தொடக்கம் நெல்லியடி புதிய சந்தை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டு தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தற்பொழுது விவசாயிகள் தங்களுடைய பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும்  மரக்கறி வகைகள் போதிய அளவு  விவசாயிகளை கொண்டு வருமாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நிர்வாகம் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. விவசாயிகளின் மரக்கறி வகைகளை  கழிவுகள் இல்லாமல் கொள்முதல் செய்வதனால் வேறு  இடங்களுக்கு மரக்கறி  வகைகளை கொள்முதல் செய்ய சென்ற வியாபாரிகள் தற்போது நெல்லியடி சந்தையில் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக வருகின்றார்கள் என்றும்  விவசாயிகள் தங்களுடைய விவசாய பொருட்களை சந்தையில் கொண்டு வந்து நேரடியாககழிவு இல்லாமல் கொடுக்கலாம் எனவும் பிரதேச சபை  நிர்வாகம் தெரிவித்துள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed