நெல்லியடி கைகலப்பு- முக்கிய நபர் கைது

நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும் நடத்துநருடன் கைகலப்பில் ஈடுபட்ட முக்கிய நபரை போதைப் பொருளுடன் இன்று நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 4ம் திகதி இரவு பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பேரூந்து நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட போது சிலரால் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டனர். இதனையடுத்து குறித்த தினத்தில் நெல்லியடி பொலீஸார் இருவரைக் கைது செய்த போதிலும் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய நபர் தலைமறைவாகி இருந்தார். விசாரணையை பல கோணங்களிலும் முடுக்கிவிட்ட பொலீஸார் இன்று போதைப் பொருளுடன் கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டுள்ளார். குறித்த நபரை கைது செய்யும் போது பொலீஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரு பெண்களையும் கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.