Mon. May 18th, 2026

நெல்லியடி இளைஞர் தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது, வியாபார போட்டியே காரணம். வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வியாபார நிலையங்களுக்கு இடையிலான போட்டியால்
சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதனால் பல இளைஞர்கள் மற்றும் இளம் குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் கூட நெல்லியடி இளைஞர் ஒருவரைப் பற்றிய தவறான செய்தி ஒன்று இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக இன்று காலை எனது வீட்டிற்கு முன்பாக கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதில் சில நாட்களுக்கு முன்பாக வியாபார போட்டி காரணமாக நெல்லியடி வர்த்தக நிலையத்தில் பணி புரியும் ஒருவர் தொடர்பாக அவரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல் ஒன்றினை வெளியிடுமாறு கேட்டிருந்தோம். அவர்களும் அதனை பிரசுரித்தார்கள். ஆனால் தற்போது எமது தவறினை உணர்ந்து குறித்த இணையத் தளத்தில் இருந்து செய்தியினை மீள எடுக்குமாறும், எங்களது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டோம் எனவும் தெரியப்படுத்தினோம். ஆனால் எம்மால் வழங்கப்பட்ட மறுப்பறிக்கையை குறித்த இணையத்தளத்தில் பிரசுரிக்க அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் குறித்த இளைஞர் தொடர்பான உண்மைக்கு புறம்பான செய்திகளை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் முகமாக தங்களது அங்கீகரிக்கப்பட்ட இணைத்தளத்தை நாடியுள்ளோம்.
போலியான தகவல்களை வெளியிட்டமைக்கு மனம் வருந்துகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமராட்சி பகுதியில் குறித்த வர்த்தக நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்று தற்போது மிகப் பெரிய வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed