Sat. Jun 14th, 2025

நெல்லியடியில் வர்த்தக நிலையம் தீக்கிரை

இன்று புதன்கிழமை அதிகாலை நெல்லியடிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கண்ணாடி பொருத்தும் வர்த்தக நிலையம் ஒன்று முற்று முழுதாக தீக்கிரை ஆகியுள்ளது.

நெல்லியடி நகர் பகுதியில் வண்ணமாடம் ஒழுங்கையில் இறுதி வர்த்தக நிலையமாக இயங்கும் ஸ்ரீஜெயராம்  கண்ணாடி கடையே தீக்கிரை ஆகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் மின்ஒழுக்காக இருக்கலாம் என தெரிய வருகிறது.

விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் அவர்களின் பணிப்பின் பேரில், பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். செயலாளரினால் உடனடியாக மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்திருந்த போதும் பிரதேச சபையின் ஊழியர்கள், வர்த்தக சங்கத்தினர், பொலீஸார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் தீ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்