Thu. Mar 28th, 2024

நெல்லியடியில் திருடன் பொதுமக்களால் நையப்புடைப்பு

சிறைச்சாலையில் இருந்து வந்து 3 நாட்களிலேயே மீண்டும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை அப்பகுதி பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். குறித்த திருடனை பிடிப்பதற்கு முயற்சி செய்த போது திருடனால் தாக்கப்பட்டு ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நெல்லியடி திருமகள் சோதி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீடு ஒன்றிலேயே நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உடுப்பிட்டி நாவலடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் அவர்கள் அலுவலகம் சென்ற போது குறித்த திருடன் மதிலேறி விழுந்துள்ளான். இதனை அவதானித்த அயல் வீட்டார், வீட்டின் உரிமையாளர்களுக்கும் அருகில் உள்ள வீட்டுக் காரர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவித்த பின்னர் அவரை பிடிப்பதற்காக பலரும் சேர்ந்து சென்ற போது கையில் கத்தியை வைத்து பயமுறுத்தி உள்ளார்.  இருப்பினும் பலரும் சேர்ந்து மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த திருடனிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த திருடன் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்