Thu. May 21st, 2026

நெல்லியடி சந்தியில் லஞ்சம் பெறும் போக்குவரத்து பொலிஸார்

நெல்லியடி நகரப்பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனங்களில் வருபவர்களிடம் சிறிய பிழைகளை உன்னிப்பாக கவனித்து குற்றத்தை நிரூபித்து லஞ்சமாக பெருந்தொகையான பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள். போக்குவரத்து குற்றத்துக்கு லஞ்சமாக பெறுவது  மட்டுமல்லாமல் வாகனத்தில் வருவோர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்றும் பாராமல் அவர்கள் மேல்  கைவைத்து சம்பவங்களும் நிகழ்கின்றது. இன்று திங்கட்கிழமை நெல்லியடி நகர பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் நின்ற போக்குவரத்து போலீசார் மூன்று இளைஞர்களை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து வழக்கு எழுதுபோவதாக  பாசாங்கு செய்து  லஞ்சம் பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம். இந்த சம்பவத்தின் பொழுது 500 ரூபா தாள் ஒன்று கைமாறுவதை எமது நியூஸ் தமிழ் செய்தியாளர் கண்டுள்ளார்.தொடர்ச்சியாக போக்குவரத்துப் பொலிசார்வாகனச் சாரதிகள் இடம் பெரும் தொகையான லஞ்சத்தை பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மலசல கூட பகுதிக்கு  வாகன சாரதிகளை செல்லுமாறு கூறி அங்கு வைத்து லஞ்சத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.  வட மாகாண பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு லஞ்சம் பெறுபவர்களை தங்களுக்கு இப்பொழுது காட்டி தந்திருக்கிறோம். இதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

About The Author

Share This:

Leave a Reply

You may have missed