நெடுந்தீவுக்கு அருகே வைத்து நான்கு இந்திய மீனவர்களை கைது

இலங்கை கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நெடுந்தீவுக்கு அருகே வைத்து நான்கு இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளார்கள்
உள்நாட்டில் தயாரித்த படகைகொண்டு இலங்கையின் கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுதே கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசந்துரை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார்கள்