நுளம்பு திாி இல்லாத வீட்டில் நுளம்பு திாியால் தீ விபத்து எப்படி? மரணத்தில் சந்தேகம். மனைவி, தாய்..
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீ விபத்தில் படுகாயமடைந்த நபா் உயிாிழந்தமை தொடா்பாக மனைவி மற்றும் தாய் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனா்.
கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு சூரியகுமார் (வயது 34) என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சூரியகுமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனா்
இதன்போது 3 பேரும் மதுபோதையில் இருந்துள்ளனா். பின் உணவருந்திவிட்டு இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளனர்.
இதன்போது மனைவியும் சிறு பிள்ளைகளும் வீட்டின் உள்ளே படுத்துறங்கியுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் சந்தம் கேட்ட சமயம் நெருப்பில் எரிந்த நிலையில்
இருந்த கணவரை கிணற்றடியில் வைத்து நண்பர்கள் இருவரும் குளிக்கவாற்றனர். அதன்போது தீயில் எரிந்த்தாக கணவர் தெரிவித்தார்.
என உயிாிழந்தவாின் மனைவி கூறியுள்ளாா். இதனையடுத்து 27ம் திகதி அதிகாலை மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று காலையில் படுகாயமடைந்த நபா் உயிாிழந்துள்ளாா்.
இந்நிலையில் காரணமாக கணவருடன் இருந்த இரு நண்பர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. ஏனெனில் நுளம்புத் திரியில் எரிந்து காயம் ஏற்பட்டதாக கணவர் தெரிவித்தாலும்
வீட்டில் நுளம்புத் திரியே கிடையாது என உயிாிழந்தவாின் மனைவி கூறுகிறாா். இதேநேரம் உயிரிழந்தவரின் தாயார் கூறுகையில் சம்பவம் இடம்பெற்ற தினம்
தனது மகனுடன் இருந்த இரு நண்பர்கள் மீதும் வீட்டில் இருந்த மருமகளின் மீதுமே தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கின்றாா். குறித்த மரண விசாரணையை போதனா வைத்தியசாலையின்
திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.