நுணாவில் பகுதியில் பேரூந்து மினிபஸ் விபத்து, சாரதிகளுக்கு சிறுகாயம்
நுணாவில் தென்னிந்திய திருச்சபைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் 6/1/2020 திங்கட்கிழமை 12.30 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மினிபஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
கண்டிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற இ.போது.ச பேருந்து முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் யாழிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மினிபஸ்சுடன் மோதியதில் மினிபஸ் சேதத்திற்கு உள்ளாகியது
இரண்டு சாரதிகளும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் சமாதானமாகி சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது