Mon. May 18th, 2026

நீா்தேக்கத்தில் கிடந்த சிசுவின் சடலம்..!

ஹட்டன்- வனராஜா தோட்ட பகுதியில் உள்ள சாசல்றீ நீா்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசு ஒன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது.

காலை 10 மணியளவில் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று ஹட்டன் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச் செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் ஹட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed