Wed. Sep 18th, 2024

நீராவியடி பௌத்த பிக்கு விவகார வழக்க!! -ஞானசார தேரர் குழு நீதிமன்றில்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு எடுத்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மாவட்ட நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர்.

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ,விஸ்வலிங்கம் மணிவண்ணன் ,கே.சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்