நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் நீராவியடியில் தகனம்!!
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று கூடியிருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிள்கள மக்களினாலேயே நீதிமன்ற கட்டளையை மீறிய செயற்பாடு துணீகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு சட்டத்தரணிகளான கே.சுகாஸ், வி.மணிவண்ணன் ஆகியோர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்ட போதும் பௌத்த பிக்குவின் உடல் தகன் செய்யப்பட்டுள்ளது.