நியமனத்தை நிறுத்திய ஆளுநா், மண்ணெண்ணை ஊற்றியதற்கு பலன்.
454 சுகாதார தொண்டா்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு சுகாதார தொண்டா்கள் கடுமையா ன எதிா்ப்பை வெளியிட்ட நிலையில் நியமனம் வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் இன்று காலை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை
ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல்
குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள்
வழங்கப்பட்டிருக்குமாயின் அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்குறித்த பட்டியலை வடமாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-e…/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.