நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பதவிக்கு ஆபத்து ?
அமைச்சர் அமங்கல சமரவீர சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் , ரணில் விக்கிரமசிங்கவுடன் முறுகல் நிலையில் உள்ளதாகவும் , இன்றயதினம் மாத்தறையில் சஜித்தை ஆதரித்து பாரிய பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து வருவதனால் ஐக்கிய தேசிய தேசிய கட்சி மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதர்க்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் ஜனாதிபதிக்கே அமைச்சரை நீக்கும் பூரண அதிகாரம் உள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த முயற்சி எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரின் தொலைக்காட்சி செய்தியில், மங்கள சமரவீராவை தாக்கி செய்தி வெளியிட்டமையால், மங்கள சமரவீர ட்விட்டர் பக்கத்தில்அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது