Thu. May 21st, 2026

நாவற்குழி பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

நாவற்குழி 5 வீட்டுத் திட்ட கிராமத்தில் 6/1/2020 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தவறுதலாக கிணற்றில் விழுந்த சிறுவன் மரணமடைந்துள்ளார்

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் எட்வின் சாமுவேல் ( வயது 7 ) என்ற மாணவரே மரணமடைந்துள்ளார்

மழை காரணமாக கிணற்றில் நீர் நிறைந்து கையால் தண்ணீர் கிள்ளும் உயரத்தில் நீர் நிறைந்து காணப்பட்டது. சாப்பிட்டவுடன் கை கழுவுவதற்காக கிணற்றடிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் எட்டி தண்ணீரைக் கையால் அளைந்த போது தவறி விழுந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின்
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர்  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed