Sat. Feb 15th, 2025

நாளை முதல் 15ம் திகதி வரை காற்றுச் சுழற்சி – கே.சூரியகுமாரன்

நேற்றைய தினம் (09.01.2025) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடல் (Equatorial Indian Ocean) பிராந்தியத்திலும் காணப்பட்ட காற்று சுழற்சியானது இன்று (10.01.2025) இலங்கையின் கிழக்குப் பகுதிக்கு அண்மையாக காணப்படுகின்றது.

இது நாளை (11.01.2025) இலங்கைக்கு மிகவும் அண்மையாக வந்து, நாளை மறுதினம் (12.01.2025) இலங்கையின் தெற்காக நகர்ந்து,
எதிர்வரும் 13ஆம் இலங்கைக்கும் குமரி கடல் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாவின் தெற்கு பக்கமாக வந்து, எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் மாலைதீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை இந்த காற்று சுழற்சி மாலைதீவிற்கும் குமரிக்கடல் பிராந்தியத்திற்கும் இடையில் நீடிக்கும் அதே வேளை மீண்டும் ஒரு புதிய காற்று சுழற்சியானது இதே காலப்பகுதியில் (14ஆம், 15ஆம் திகதிகளில்) இலங்கைக்கு கிழக்குப் பக்கமாக வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே போன்று மேலும் ஒரு காற்று சுழற்சி 19ஆம் – 22ஆம் திகதியளவில் உருவாக சாத்தியம் உள்ளது.

-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்