Fri. Mar 21st, 2025

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் – நாகமுத்து பிரதீபராஜா-

18.12.2023 திங்கட் கிழமை இரவு 7.00 மணி

குமரிக்கடல் பகுதியில் காணப்பட்ட காற்றுச் சுழற்சி வலுவிழக்க தொடங்கியுள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் மழை விட்டாலும் கூட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு குளங்களுக்கான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை மற்றுமொரு காற்றுச் சுழற்சி சுமாத்திரா தீவிற்கு அண்மையில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது எதிர்வரும் 22.12.2023 அளவில் இலங்கைக்கு தென்மேற்கே வங்காள விரிகுடாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீளவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 22.12.2023 முதல் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்க தொடங்கும்.

-நாகமுத்து பிரதீபராஜா-

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்