நாளை முடிவை அறிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சி
ஜனாதிபதி வேட்பாளரின் முடிவை நாளை அறிவிக்கும் முடிவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் சபாநாயகர் கரு ஜெய்சூரியா ஆகியோர் வந்துள்ளதாக தெரியவருகிறது .
நேற்று இரவு இரண்டாவது தடவையாகவும் மூவரும் கலந்துரையாடும் பொழுதே இந்த முடிவுக்கு வந்ததாகவும் , நாளைய தினம் சிறிகோத்தாவில் கட்சி தலைமையகத்தில் சிறப்பு ஐக்கிய தேசிய கட்சி செயல்பாட்டுக் குழு கூட்டத்தில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு , வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது