நாளை பிரதமரை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான கூட்டம் ஒன்று இடம்பெறும் என்றும் அதனை தொடர்ந்தே நாளை பிரதமருடனான சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பிரதமர் றணில்வ் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களை நேற்று தனது கொழும்பு இல்லத்தில் சுமந்திரனுடன் சந்தித்துக்கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க தயாராகவுள்ளோம். ஆனால் இனப்பிரச்சினை தொடர்பான அவர்களின் நிலைபாட்டை ஆராய்ந்த பின்னரே அவர்களை ஆதரிக்கும் முடிவை எடுப்போம் என்று தன்னை சந்தித்த மங்கள சமரவீர , ராஜித சேனாரத்ன மற்றும் மாலிக் சமரவிக்கிரம ஆகியோரிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது