Sun. Dec 8th, 2024

நாளை பாடசாலை தொடர்பான அறிவித்தல்

கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித‌ எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன‌ குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு முழுவதும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முழுக் கடையடைப்பு நடாத்துவதற்கு வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து சங்கங்கள் எவையும் அழைப்புக்கு ஆதரவு என இது வரைக்கும் குறிப்பிடவில்லை. இதே சமயம் எதிர்ப்பும் இல்லை. இதனால் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களுக்கு அதிபர்,  ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டிய நிலையுள்ளதால் சில ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்