நாளை திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும்
நாளை ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பாக அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களே முடிவெடுக்க வேண்டும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
பரீட்சைகள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்களே முன்னெடுத்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக சில வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, நாளை திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.