Sat. Dec 7th, 2024

நாளைய தினம் வழமைபோல் பாடசாலைகள் இயங்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவிப்பு 

வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்கும். இதில் பெற்றோர்களோ மாணவர்களோ குழப்பம் அடையத் தேவையில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் நடைபெறாது என்ற செய்தி பலரிடத்தில் பரவியுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை எனது ஆளுகையின் கீழ் உள்ளது. அத்துடன் நானோ அல்லது கல்வி அமைச்சின் செயலாளரோ பாடசாலை நடைபெறாது எனும் அறிவித்தலை வெளியிடவில்லை. எனவே நாளைய தினம் வழமைபோல் மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வையுங்கள். அத்துடன் அரச நிறுவனங்களும் வழமைபோல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்