நாமலின் திருமணத்தினால் நடந்த விபரீதம்!! -ஒருவர் சாவு இருவர் காயம்-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்காக பூர்த்தி செய்யப்படாத நிலையில் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியை மறைத்து வைக்கப்பட்டிருந்த தூணில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கார் முழுமையாக சேதமடைந்துள்ளது.
பொதுவாக நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யாமல் அதிவேக நெஞ்சாலையின் நுழைவு வீதி திறந்து வைக்கப்படாது.
நிர்மாணிப்பு நடவடிக்கையின் போது அவை மூடியே வைக்கப்படும். எனினும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் நாமலின் திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர் குறித்த வீதி மூடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.