Mon. Aug 10th, 2026

நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி -சஜித் பிரேமதாச

நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.
உங்கள் இதயத்தில் ஒருவித சந்தேகமும் வேண்டாம், இந்த சஜித் பிரேமதாச தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என்று இன்று மாத்தறையில் இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் கூட்டத்தில் தெரிவித்தார்.
நான் இலங்கையை முன்னிறுத்தியே எல்லாவித செயற்பாடுகளையும் செய்வேன் என்றும், மற்ற எல்லாவற்றுக்கும் முதல் நாட்டுக்கே முன்னுரிமை அளிப்பேன் . எனக்கு மாளிகைகள் தேவையில்லை , நீங்கள் என்னை இனி மாளிகைகளில் பார்க்கமாட்டீர்கள் என்றும் , என்னை நீங்கள் இலங்கையில் உள்ள 42,000 கிராமங்களிலும் , 14,000 கிராமசேவகர்கள் பிரிவுகளிலும் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed