Wed. Jun 10th, 2026

நான் எடுத்த மிக தவறான முடிவு, மனம் வருந்தும் ரேவதி

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை ரேவதி, 1983 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் மண் வாசனை படம் மூலம் அறிமுகமானவர். இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே 1986 ஆம் ஆண்டு சுரேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2002 ஆம் ஆண்டு விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரையிலும் பிஸியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

தனது கடந்தகால திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம் எனக்கு 16 வயது இருக்கும்பொழுது பாரதிராஜா அங்கிள், ‘மண்வாசனை’ படத்தில் நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, ‘நான் நடிகையா?’ என்று பயந்து போய் ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று சொன்னேன். என்னுடைய மாமாதான் என்னை நடிக்க ஊக்கிவிச்சதால் நடிக்க சம்மதித்தேன் . ஆனால் ‘எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாதென்று பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, ‘ நல்லதா போச்சு. உன்னை நல்லா நடிக்க வைக்கிறது என்னுடய பொறுப்பு என்று சொன்னார். அவர் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்…

என் வாழ்க்கையில நான் எடுத்த மிக தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம் என்று நினைக்கிறேன் . அந்தநேரம் கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரியாகி, இன்னும் நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். . இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல கேரக்டர் வர ஆரம்பிச்சிருக்கு. இப்ப கொஞ்சம் பிஸியா நடிக்கிறேன். இனி காலம் என்னை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’ என்று கூறினார்

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed