நானே ஜனாதிபதி வேட்பாளர் , தன்னிடம் பெரும்பான்மையுள்ளதாக ரணில் தெரிவிப்பு

கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நம்பிக்கைக்குரிய உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். கட்டளையிட்டதாகக் கூறினார்.
அவருக்கு மிகவும் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று அவரைச் சந்தித்து கட்சியின் செயற்குழுவில் அவரது பலத்தை மதிப்பிட்டது என்றும் இதன் மூலம் தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளார்.
அமைச்சர்களான லட்சுமன் கிரியெல்லா, அகிலா விராஜ் கரியவாசம்,கருணநாயக்க, தயா கமகே, சாகல ரத்நாயக்க, ரவி , ஜான் அமரதுங்க மற்றும் அவரது மருமகனும் பிரபல வர்தகருமான தினேஷ் வீரக்கொடி ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன
அவர்கள் செயற்குழுவின் அமைப்பை மற்றும் உறுப்பினர்களை ஆராய்ந்ததாகவும், இதன்மூலம் பிரதமர் ரணில் ஆகக்குறைந்த 65 சதவீத உறுப்பினர்களின் ஆதரவைக் பெற்றுக்கொள்ள முடியும் என்று இதன் முடிவில் வெளிவந்ததாகவும் தெரியவருகின்றது
மேலும் , அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ஏற்கனவே கையெழுத்திட்ட 20 எம்.பி.க்கள், தனக்கு ஆதரவு அளிக்க உறுதியளித்திருப்பதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
இதன் மூலம் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பொறி ஒன்றையே வைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தான் ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காவே அவர் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாகவும், பல மேல்தட்டு வர்க்க ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கே அதரவு வழங்குவதாகவும் தகவல்கள் வருகின்றன