Sat. May 16th, 2026

நாட்டு மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!

இலங்கையில் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தொழு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் அதிலிருந்து தம்மை மக்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அவதானமாக செயற்படுமாறும் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் வருடத்திற்கு 1700 – 2000 தொழுநோயாளர் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் கிறிஷாந்த தெரிவித்துள்ளார். இதன்படி மக்கள் அதிகம் உள்ள பிரதேசங்களில் இந்த நோயளர்கள் அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாராவது ஒருவரின் உடலில் தழும்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவ்வாறு சிகிச்சை பெற்றால் மாத்திரமே உடனடியாக குணப்படுத்த முடியும்.

இந்நிலையில் உடலில் சந்தேகத்திற்கிடமான அடையாளம் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed