நாட்டிலுள்ள 10 வீதமான ஆசிரியர்கள் தகுதியற்றவர்கள்
இலங்கையில் ஆசிரியர் சேவையிலுள்ள 280,000 பேரில் சுமார் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு தகுதியற்றவர்கள் என்று கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 1400 வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனகடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார்
மேலும் அங்கு பேசிய ஜனாதிபதி, இந்த ஆசிரியர்கள் தேவையான பரீட்சை சான்றிதழ்கள் மற்றும் தகைமையை கொண்டிருக்கிறார்கள் . ஆனால் ஆசிரியர் தொழிலுக்கு முக்கிய தேவையான தரம் அவர்களிடம் இல்லை என்று ஜனாதிபதி கூறினார்