Sat. Dec 7th, 2024

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே தேவை, ஜனாதிபதி தேர்தல்கள் அல்ல-சம்பந்தன்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கொள்கை  ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு ஆலோசகர் ரிக்கார்டோ செல்லெரி, மற்றும் அரசியல், வர்த்தக மற்றும் தகவல் தொடர்பு பிரிவு துணைத் தலைவர் அன்னே வாகியர் சாட்டர்ஜி மற்றும் பலர் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தனை நேற்று . கொழும்பில் சந்தித்திருந்தார்கள்.

தூதுக்குழுவிற்கு விளக்கமளித்த சம்பந்தன், 1994 முதல் இந்த நாட்டில் உள்ள மக்கள் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனதிபதியை ஒழிப்பதற்காக பலமுறை வாக்களித்துள்ளனர். இது தேர்தல்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் தீர்ப்பாக இருந்துள்ளது . இந்த சூழலில் மற்றொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ஒரு அநீதியான ஜனநாயகத்துக்கு எதிரான செயல், இது இந்த நாட்டு மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் சம்பந்தன் கூறினார்.

மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 90% க்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பை ஆதரித்தது வாக்களித்ததாகவும் , அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நிறைய வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இப்போது அந்த முயற்சிகள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றார்
கடந்த முப்பது ஆண்டுகளில் 1988 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல திட்டங்கள் வகுக்கப்படடன , ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நேரத்தில் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே தேவை, ஜனாதிபதி தேர்தல்கள் அல்ல என்று சம்பந்தன் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்