நாடு முழுவதும் குறைந்தது 271 வீடுகள் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்துள்ளது
நாடு முழுவதும் குறைந்தது 271 வீடுகள் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இரத்தினபுரி , வவுனியா , கேகாலை , புத்தளம் , அம்பாந்தோட்டை மற்றும் நியூ எலியா பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பாதிக்கப்படடவர்களுக்கான நட்ட ஈட்டு கொடுப்பனவுகள் சேதங்களை பார்வயிடட பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
ஏற்கனவே காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டு வடக்கு ,வட மத்திய வட மேற்கு மாகாணங்கள் ,திருகோணமலை மற்றும் மாத்தளை பகுதிகளை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.