Fri. Jan 17th, 2025

நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை இழக்கபோகும் மஹிந்த.

மஹிந்த உள்ளிட்ட பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவரை 2 வார காலத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்தரகட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வாரத்திற்குள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு முன்பாக கட்சியின் சட்டவிதிமுறைகளை மீறியமைக்கான காரணத்தை தெரிவிப்பதற்கே

இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச

உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்துசென்று அக்கட்சியில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சுதந்திரக் கட்சி இந்தக் காலக்கெடுவை விதித்திருப்பதாக அறியமுடிகின்றது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் காரணத்தை வந்து வெளியிடாவிட்டால்

நாடாளுமன்ற உறுப்புரிமைகூட பறிக்கப்படலாம் என்ற சாத்தியமும் நிலவிவருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்