Sun. Apr 12th, 2026

நாகர்கோயில் ம.வி.உதவி அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் மனோகரா பகுதியில் வசிப்பவரும் யா/நாகர்கோயில் மகா வித்தியாலய உதவி அதிபருமான  யோகதாஸ்  அசோக்காந்  [வயது 42 ] என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு உயர்குருதி அமுக்கம் ஏற்பட்ட நிலையில் தலையில் உள்ள நரம்பு வெடித்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed