நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடம் கையளிப்பு
நவீன வசதிகளுடன் கூடிய பெண்களுக்கான மலசலகூடம் கையளிக்கப்பட்டது.
நெல்லியடி மத்திய கல்லூரியின்
கனடா பழையமாணவர் சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட நவீன வசதிகளை உடைய பெண்களுக்கான மலசலகூடம் நேற்று வெள்ளிக்கிழமை மாணவிகளிடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெல்லியடி மத்திய கல்லூரி கனடா பழைய மாணவர்சங்கத் தலைவர் ந.ஞானேந்திரன் மற்றும் சுவிஸ் பழையமாணவர் சங்கப் பிரதிநிதி க.கருணேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.