Sun. Oct 6th, 2024

நவாலியில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் அட்டகாசம், 60 பவுண் நகை கொள்ளை, வீட்டிலிருந்தவா்களுக்கு வாள்வெட்டு.

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையா்கள் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளை யிட்டுள்ளதுடன், தடுத்தவா்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.

நவாலி- கொத்துக்கட்டி வீதியில் உள்ள வீடொன்றில் சில தினங்களுக்கு முன்னா் திருமணம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கொள்ளையா்கள் புகுந்துள்ளனா்.

வீடு புகுந்த கொள்ளையா்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை காண்பித்ததுடன், அதில் அணிந்திருந்த நகைகளை கேட்டு மணப்பெண், மணமகன் ஆகியோரை தாக்கியுள்ளதுடன்,

தாலி கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனா். கொள்ளையா்கள் வீட்டுக்குள் புகுந்த நிலையில் திருடா்களை தடுக்க முயன்றவா்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாறு தாக்குதலுக்குள்ளாவா்களில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.

குறித்த கும்பலின் செயற்பாடு தொடர்பில் திருமண வீட்டின் மணமகளால் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் தெரியப்படுத்தியதன் பயனாக அயல்வீ்டுக்காரர் ஒருவர்

ஏனையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்கார நபரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

இச்சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும்

கைப்பைகளும் கொள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகல் வழங்கப்பட்டதை அடுத்து

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்