Wed. Sep 18th, 2024

நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பது குறித்து சகல கட்சி செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் ஓர் தேர்தல் வருடமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் தத்தமது ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயரை அறிவித்திருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் நடத்துவதில் பல குழப்பங்கள் நீடித்திருந்தன.

இந்நிலையில் நவம்பர் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், இது குறித்தே கட்சி செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்