Wed. Sep 18th, 2024

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு – கார்திகேசு பாஸ்கரன்

யாழ் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால்  குறைக்கப்படுகின்றது என யாழ்மாவட்ட பேக்கரிகள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகின்றதுடன் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வரைகாலமும் பிற மாவட்டங்களை விட எமது மாவட்டத்தில் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோதுமை மா உட்பட்ட மூலப் பொருட்களின் விலைகள் மாற்றமடையும் போது பணிஸ் வகைகளின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்