Sun. Dec 8th, 2024

நல்ல உடற்பயிற்சி, பாலியல் வாழ்க்கைக்கு முக்கியம்- ஆய்வுத்தகவல்

உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்மையில் உடற்பயிற்சியை தவிர வேறேதுவும் தேவையில்லை – இது  உங்கள் பாலியல் வாழ்க்கையின் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும் என்பது தான்  சிறப்பானவிடயம்.

ஆரோக்கியமாக உள்ள ஆண்களும் பெண்களும் சிறந்த பாலியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்று பாலியல் மருத்துவத்திற்கான அமெரிக்காவின் வடமேற்கு மருத்துவ நிலையத்தின்   இயக்குநர் டாக்டர் லாரன் ஸ்ட்ரைச்சர் தெரிவித்தார். இவரின் கருத்துப்படி எந்தவிதமான உடலியல் நோயும் பாலியல் தொடர்பான உங்கள் செயல்பாட்டடை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கும். சாதாரண தலைவலி கூட இதற்கு ஒரு உதாரணம் என்று நம்மில் பலபேருக்கு தெரியும்.

 

ஏரோபிக் என்கின்ற உடற்பயிற்சி ( இதயத்துடிப்பு, நாடித்துடிப்பை மற்றும் சுவாசத்தை அதிகரிக்கக்கூடிய உடட்பயிற்சிகள்) குறிப்பாக இருதய உடற்திறனை மேம்படுத்துவதில் சிறந்தது, இது பிறப்புறுப்பு பகுதி உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.

“இருதயத்தை ஊக்கிவிக்கின்ற எந்தவித உடற்பயிற்சியும்   ஒரு ஆணின் அல்லது பெண்ணின் பாலியல் உணர்வையும் அதன் செயற்பாட்டையும் அதரிக்கப் போகிறது” என்று பாலியல் சிகிச்சையாளரும் கல்வியாளருமான லாரா பெர்மன் கூறினார். உங்கள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமானதாக இருந்தால், உங்கள் உணர்ச்சிகளுக்கான விழிப்புணர்வும்  சிறந்தாக இருக்கும் ”

பெண்களுக்கு, இரத்த ஓட்டம் என்பது முக்கியமானது, ஏனெனில் இது உராய்வு நீக்கியை  உருவாக்கும் அடிப்படைக் கூறு. எனவே சிறந்த இரத்த ஓட்டம் என்பது பெண்களில் ஈடுபாடு, உணர்வு மற்றும் உராய்வு தன்மைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுடன்   ஆண்களில் விறைப்புத்தன்மைக்கும்  உதவுகிறது.

 

சுகாதார ஆலோசனை நிலையங்கள்  ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும்  அல்லது 75 நிமிட தீவிர  ஏரோபிக் உடற்பயிற்சியை பரிந்துரைக்கின்றன. மிதமான உடற்பயிற்சிக்கு விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது லைட் பைக்கிங் இரண்டு எடுத்துக்காட்டுகள்; தீவிர அல்லது ஏரோபிக் உடற்பயிற்சிக்கு வேகமா நீண்ட தூர ஒடுதல், நீச்சல், வேகமான சைக்கிள் ஓட்டுதல் அல்லது கூடைப்பந்து அல்லது கால்பந்து விளையாட்டில் பங்கேற்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

 

இதே நேரத்தில், ​​பாலியல் மருத்துவ இதழின் இந்த மாதம்  வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அதிக அளவிலான ஏரோபிக் உடற்பயிற்சி பாலியல் செயல்திறன், சகிப்புத்தன்மை மற்றும் சுறுசுறுப்பான ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல்  விருப்பத்தை மேலும் அதிகரிக்கும்  என்று கூறுகிறது.

 

 

இந்த ஆய்வில். அதிக உடற்பயிற்சியில் ஈடுபடுவோரில் , குறிப்பாக பெண்களுக்கு, அதிக நன்மை கிடைத்தது என்று இந்த ஆய்வின் முன்னணி  எழுத்தாளர் டாக்டர் பெஞ்சமின் பிரேயர் கூறினார்.

 

இதில் பங்குபற்றியவர்கள்  ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் கிளப்புகளிலிருந்து பங்குபற்றியிருந்தனர்.  அவர்கள் அனைவரும் சாதாரண  விளையாட்டு வீரர்கள் “மிகவும் சுறுசுறுப்பானவர்கள், விளையாட்டுகளில் உண்மையில் ஆர்வம் கொண்டவர்கள் என்று கூறினார்.

 

இவர்கள் அனைவரும்  ஒரு சிறப்பு மக்கள் கூட்டமாகும், இவர்களை சாதாரண சராசரி மனிதர்களுடன் ஒப்பிட முடியாது. இவர்கள்  உடல் ரீதியாக மிகவும் பொருத்தமான ஆராய்ச்சிக்கு தேவையான குழுவாக இருந்தார்கள்.

 

இவர்களில்  ஒரு மைல் தூரத்தை  7 நிமிட நேரம் என்ற  வேகத்தில் வாரத்திற்கு 4½ மணி நேரம், ஓடிய ஆண்கள் 23% குறைந்த  விறைப்புத்தன்மையைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

 

 

இந்த  முடிவுகள் பெண்களுக்கு இன்னும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. அதே 7 நிமிட மைல் வேகத்தில்  வாரத்திற்கு 4 மணிநேரம் மட்டுமே ஓடிய பெண்கள்  30% குறைந்த பாலியல் செயலிழப்பை கொண்டிருந்தனர்.

 

இவர்களை விடவும் மிகவும் வலிமையாக இருந்த பெண்கள் மிகவும்  குறைவான பாலியல் செயலிழப்பைப் கொண்டிருந்ததுடன், அவர்கள் குறைந்த பாலியல் தூண்டலின்மை மற்றும் கூடிய உச்சமடைதலை கொண்டிருந்தனர்  என்றும் இந்த ஆராச்சியின் முடிவில் தெரியவந்தது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்