Fri. Jan 17th, 2025

நல்லூர் முருகனிடம் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்!!

நல்லூர் ஆலயத்தில் மின் சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்