Thu. Sep 28th, 2023

நல்லூரில் நடமாடும் பொலிஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சிசிரிவி கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர்.

இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொலிஸ் நடமாடும் சிசிரிவி கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்