Fri. Jan 17th, 2025

நல்லூரில் இராணுவ தளபதி!! -பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்தார்-

யாழிற்கு இன்று வருகைதந்த இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வுகளை மேற்கொண்டார்.


இரானுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இரானுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்