Sat. Sep 7th, 2024

நல்லுாா் கந்தனுக்கு பெருந்திருவிழா..! இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடா்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி

மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு மறைகாணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றுச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச் சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்