Sat. Dec 7th, 2024

நல்லுாாில் பிச்சை எடுத்தவா்களுக்கு தலா 20 ஆயிரம் தண்டம்..!

மலையக பகுதிகளில் இருந்துவந்து நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில பிச்சை எடுத்துவந்த 9 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதிவான் நீதிமன்றம், கடுமையாக எச்சாித்து விடுவித்திருக்கின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். யாசகர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (ஓகஸ்ட் 26) திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமையில் இருந்த பணம், பாத்திரங்கள்

மற்றும் ஆடைகளை சான்றுப்பொருள்களாக பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர். 9 பேருக்கும் எதிராக யாசகம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.   9 பேரும் யாசகம் பெற்ற போதே கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொருவரும் பதுளை, ஹட்டன் என மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஆலயத்தில் கூடும் அடியவர்களிடம் திருட்டில் ஈடுபடவே வந்துள்ளனர் என்று சந்தேகம் உள்ளது.

என்று பொலிஸார் மன்றுரைத்தனர். 9 பேரும் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். 9 பேரையும் கடுமையாக எச்சரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், ஒவ்வொரும் 20 ரூபாவை தண்டமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், அவர்களது உடமையிலிருந்து மீட்கப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை மீள வழங்குமாறும் நீதிவான் அறிவுறுத்தினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்