நடேஸ்வரா கல்லூரியின் 125 ஆண்டின் கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம்த
யா/நடேஸ்வரக் கல்லூரி
125ஆவது ஆண்டு விழாவின் முதலாம் நாள் நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 8 முதல் காங்கேசன்துறை பிரதேச சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஒரு அங்கமான 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன் இறுதியாட்டத்தில் வடமராட்சி சொக்கர் பிரண்ஸ் அணியை எதிர்த்து வலிகாமம் எவ்.சி. அணியும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் யாழ்ப்பாணம் எவ்.சி அணியை எதிர்த்து யங்றோயல் அணியும் மோதவுள்ளன.
யா/நடேஸ்வரக் கல்லூரி அதிபர்
பா.பாலகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் இராஜகோபால் ராஜசீலன் சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்
சிறப்பு விருந்தினர்குமாரசூரியர் செந்தில்குமரன் கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை தபாலதிபர் திருமதி சந்திரகாந்தி சத்தியநாதன், பழைய மாணவர் சங்க உப தலைவர் சின்னப்பு காந்தசீலன், சுன்னாகம் ரஞ்சனாஸ் புடைவையகம் உரிமையாளர்
சுப்பையா கனகநாயகம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.