நடேசலிங்கம் பிரியா குடும்பத்துக்கு மேலும் இருவாரம் தங்க அனுமதி, நாடு கடத்துவதில் ஆஸ்திரேலியா மும்முரம்

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்ளும் இலங்கை தமிழ் குடும்பதுக்கு முற்றுமுழுதான விசாரணையை எதிகொள்ளும் வகையில் மேலும் இரண்டு வாரகாலம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்படுள்ளார்கள்
இன்று மெல்போர்னில் இடம்பெற்ற வழக்கின் போது , குடும்பத்தின் இளைய மகள் தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்குவது தொடர்பான தீர்ப்பை நீதிபதி மொர்டெக்காய் ப்ரோம்பெர்க் தள்ளிவைத்தார் மேலும் அவருடைய விண்ணப்பம் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டதா என்பது குறித்த இறுதி ஆதாரங்களை முன்வைக்க செப்டம்பர் 18 வரை குடிவரவு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கினார்
இரண்டு வயது தருணிகா உண்மையில் மதிப்பீடு செய்யப்பட்டு விசாவிற்கு தகுதியற்றவர் என்று குடிவரவு அமைச்சர் வெளிப்படுத்திய பின்னர் கடந்த புதன்கிழமை நீதிமன்றம் இந்த வழக்குக்கு இரண்டு நாள் தாமதத்தை வழங்கி இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டது
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து படகில் பெற்றோர் தனித்தனியாக வந்ததையடுத்து, தருனிகா மற்றும் அவரது சகோதரி கோபிகா, 4, இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தார்கள் .
இந்த ஜோடி குயின்ஸ்லாந்து நகரமான பிலோலாவில் குடியேறியது, ஆனால் கடந்த ஆண்டு அவர்களின் பிரிட்ஜிங் விசாக்கள் முடிவடைந்த பிறகு நாட்டில் தங்குவதற்கான அவர்களின் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னர் குடும்பம் கடந்த ஆண்டை மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு நிலையத்தில் கழித்திருந்தார்கள்
எவ்வாறாயினும், பாதுகாப்பு விசாவிற்கு தாரூனிகாவின் விண்ணப்பம் முறையாக மதிப்பிடப்படவில்லை என்ற காரணத்தினால் நீதிபதி ஒருவர் தடை உத்தரவு பிறப்பித்த பின்னர் விமானம் நடுவானில் வைத்து
தடுத்து நிறுத்தப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த போதிலும், தமிழர்களாக இருப்பதால் துன்புறுத்தல் குறித்த அச்சம் இன்னமும் தங்களுக்கு இருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
குழந்தைகளின் தந்தை நடேசலிங்கம் கடந்த காலங்களில் நாட்டிற்குச் சென்று வந்திருப்பதை கண்டறிந்த பின்னர் இதுபோன்ற கூற்றுக்களை உள்துறை மற்றும் குடிவரவு அமைச்சர்கள் நிராகரித்துள்ளார்கள்
எவ்வாறாயினும், எந்தவொரு அமைச்சரும் குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை, எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைய மீண்டும் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்