Sun. Oct 6th, 2024

நடு வீதியில் முன்னாள் கணவனால் கழுத்தறுக்கப்பட்ட பெண், துரத்தி பிடித்த பொலிஸாா்.

கனடா நாட்டில் இளம் பெண்ணொருவா் முன்னாள் கணவனால் நடு வீதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாா்.

தர்சிகா ஜெயநாதன் (27) என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை ஸ்காபுறோவின் கிழக்கு பகுதியில் இந்த கொலை நடந்தது.

மாலை 6 மணிக்கு பின்னர் மோரிஷ் ஆர்.டி பகுதியில் ஒரு மனிதர் கத்தியை துணியால் சுற்றியபடி தப்பியோடுவதாக ஏராளமான

தொலைபேசி அழைப்புக்கள் ரெரண்டோ பொலிசாருக்கு சென்றன. நடந்து சென்று கொண்டிருந்த தர்சிகாவை கத்தியால் வெட்டிச் சரித்து விட்டு,

காரில் ஏறி கொலையாளி தப்பித்தார். ரெரன்டோ பொலிசார் துரிதமாக செயற்பட்டு, அவரை மார்கம், மில்னர் அவெனியூ பகுதியில் கைது செய்தனர்.

வெட்டப்பட்ட தர்சிகா வீதியில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அந்த பகுதியில் நின்றவர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கொலையாளி, தர்சிகாவின் முன்னாள் கணவனான சசிகரன் தனபாலசிங்கம் (38) என அடையாளம் காணப்பட்டார்.

முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நேற்று மாலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்