தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை(09) முற்பகல் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் மயிலியதனை, தொண்டைமானாற்றைச் சேர்ந்த சிவஞானம் தனேஸ்வரன்
(வயது- 24) என பொலீசார் தெரிவித்தனர்.
மேற்படி இளைஞர் தினமும் தோட்ட வேலைக்கு செல்வதாகவும் அவ்வாறு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை(08) காலை 7 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அவ்வாறு சென்றவர் மாலை 7 மணி ஆகியும் வீடு வந்து சேரவில்லை.
இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை(09) மேற்படி இளைஞர்களின் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஆழமான கிணறு ஒன்றில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கிணற்றுக்கு வெளியில் இரண்டு விஷ மருந்து போத்தல்கள் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தின் மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறி இருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சடலத்தை பார்வையிட்டதுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.