Wed. Sep 18th, 2024

தொலைபேசி நிறுவன பெயரை குறிப்பிட்டு வடமராட்சியில் பண மோசடி மக்கள் அவதானம்

வடமராட்சி பகுதியில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் என பெயர் குறிப்பிட்டு வடமராட்சி வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று சனிக்கிழமை தொலைபேசி ஊடக வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களிடம் தாம் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தில் இருந்து கதைப்பதாகவும் தங்களுக்கு 97 ஆயிரம் ரூபா பணம் கிடைத்துள்ளது. தங்களின் மக்கள் வங்கி கணக்கு இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு வர்த்தகர்களும் வங்கி கணக்கு இலக்கத்தை அனுப்பி உள்ளனர். அதன் பின்னர் OTP இலக்கம் தங்களின் தொலைபேசி இலக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அதனை தமக்கு அனுப்புமாறும் கூறியுள்ளனர். இதற்கு பல வர்த்தகர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் சில பொது மக்கள் பணத்தை பறிகொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தில் சில வர்த்தகர்கள் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக பொலீஸார் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்